சென்னையில் வாக்கு எண்ணும் பணி நாளை (19-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
ராணி மேரி கல்லூரியில் ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-&திருவல்லிக்கேணி ஆகிய 5 தொகுதிகளின் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.
லயோலா கல்லூரி மையத்தில் பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மைலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
ஓட்டு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில் ஒவ்வொரு மேஜைக்கும் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்படுகிறது. கண்காணிப்பு கேமராக்களை இணைத்து கட்டுப்பாட்டு அறை செயல்படும்.
No comments:
Post a Comment