Wednesday, 10 April 2013

மக்களின் பார்வையில் கொரட்டூர் T-3 காவல் நிலையம்


சென்னை, பாடி கொரட்டூர் T-3 காவல் நிலையத்தின் வாசலில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப் பட்டுள்ளது. அதில் அன்றன்றைய காவல் துறையினரின் நிகழ்ச்சி பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. 

உள்ளே நுழைந்தால் குளிர் நீர் பெட்டி எந்நேரமும் பொதுமக்களின் தாகத்தைத் தணிக்க காத்துக்கொண்டிருக்கிறது. காவல் நிலையத்தின் உள்ளே நுழைந்தால் பெண் போலீஸாரின் அன்பான வரவேற்பு, அவர்கள் நம்மை நடத்தும் விதம் இவையெல்லாம் காவல் நிலையம் என்றாலே பயந்து போயிருந்த நம்மை, நம் சொந்த வீட்டுக்குள் உரிமையோடு நுழைகிற ஒரு எண்ணத்தை கொடுக்கிறது. 

சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திரு.பி.எஸ்.வெங்கடேஷ் குமார் அவர்களின் முயற்சியில் இதுவரை 35-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் வீட்டு புரோக்கர்களுடன் கலந்துரையாடல், பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றுள்ளன. 

சமீப காலமாக மக்கள் தங்களின் பாதுகாப்பு உணர்வு மேம்பட்டிருப்பதாகவே கூறுகிறார்கள். இருந்தாலும் ஆங்காங்கே CCTV கேமரா பொருத்தப்பட்டால் நன்றாக இருக்கும் என்றும் அதற்கு பொதுமக்களின் ஆதரவும் நிறைய வேண்டும் என்றும் எதிர்பார்ப்பதாக காவல் நிலைய ஆய்வாளர் கூறுகிறார்.

No comments:

Post a Comment