தமிழக முதல்வரின் நேற்றைய சட்ட மன்ற அறிவிப்பில் கூறியதாவது: ‘சென்னைக்கு அருகிலுள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் தற்போது தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கைவசம் உள்ள நிலத்தில் முன்கட்டுமான தொழில்நுட்பம் என்ற நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சுமார் 612 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,500 பல அடுக்கு மாடி குடியிருப்புகள், சுயநிதி திட்டத்தின் கீழ் கட்டப்படும்.
’சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 7 இடங்களில் 13.80 ஏக்கர் நிலத்தில், 844 அடுக்குமாடி குடியிருப்புகள் 371 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் காஞ்சிபுரத்தில், இரண்டு இடங்களில் 22.70 ஏக்கர் நிலத்தில் 1500 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 32 மேம்படுத்தப்படும் மனைகள் 303 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,
’டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் ரங்கநாதபுரம் திட்டத்தின் கீழ் 480 குடியிருப்புகளும், பார்த்தசாரதி நகர் திட்டத்தின் கிழ் 120 குடியிருப்புகளும், பெரம்பூர் தொகுதியில், சத்தியவாணி முத்துநகர் திட்டத்தின் கீழ் 392 குடியிருப்புகளும், எழும்பூர் தொகுதியில் நேரு பார்க் திட்டத்தின் கீழ் 288 குடியிருப்புகளும், பிள்ளையார் கோயில் தெரு திட்டத்தின் கீழ் 32 குடியிருப்புகளும், சேப்பாக்கம் தொகுதியில் லாக் நகர் (நாவலர் நகர்) திட்டத்தின் கீழ் 304 குடியிருப்புகளும், அயோத்தியா குப்பம் திட்டத்தின் கீழ் 708 குடியிருப்புகளும், சைதாப்பேட்டை தொகுதியில் கோட்டூர்புரம் திட்டத்தின் கீழ் 136 குடியிருப்புகளும், மயிலாப்பூர் தொகுதியில் ஆண்டிமான்ய தோட்டம் திட்டத்தின் கீழ் 42 குடியிருப்புகளும், பல்லக்குமான்யம் திட்டத்தின் கீழ் 48 குடியிருப்புகளும் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.’

No comments:
Post a Comment