Wednesday, 3 April 2013

‘அம்மா மெஸ்‘ - மலிவு விலை உணவகங்கள்

சென்னை நகரில் தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின் விருப்பமாக ‘அம்மா மெஸ்‘ என்கிற பெயரில் இதுவரை 200 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. 

இதன் மூலம் சென்னை நகரில் ஏழை தொழிலாளர்களுக்காக தினமும் காலையில் ஒரு இட்லி ரூ.1/-க்கும் பிற்பகலில் ரூ.5/-க்கு சாம்பார் சாதமும் மற்றும் ரூ.3/-க்கு தயிர் சாதமும் விற்பனை செய்யப்படுகின்றன. 

இத்தகைய அம்மா உணவகங்கள் முதலில் 15-ம் பின்னர் மேலும் 58 உணவகங்களும் திறக்கப்பட்டன. இந்த உணவகங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைப் பார்த்து நேற்று மட்டும் ஒரே நாளில் 127 இடங்களில் அம்மா உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இத்தோடு மொத்தமாக சென்னை நகரில் 200 உணவகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. 

இந்த 200 உணவகங்கள் ஒவ்வொன்றிலும் தலா 1700 இட்லிகள் விற்பனையாகின்றன. காலை 7 மணியிலிருந்து 10 மணிக்குள் அனைத்து இட்லிகளும் விற்று விடுகின்றன. அதாவது ஒரு நாளைக்கு 200 உணவகங்களிலும் மொத்தமாக 2.73 லட்சம் இட்லிகளும், அது போக 62,500 தட்டு சாம்பார் சாதமும், 34,500 தட்டு தயிர் சாதமும் விற்பனையாகின்றன.

 இந்த திட்டத்தின் மூலம் 3 ஆயிரம் பெண்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள். இவர்கள் மாதம் ரூ.9000/- வரை சம்பாதிக்கவும் செய்கின்றனர்.

No comments:

Post a Comment