சென்னை கொரட்டூர் T-3 காவல் நிலையத்தின் சார்பாக சட்டம், ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.பி.எஸ்.வெங்கடேஷ்குமார் அவர்கள் தலைமையில் கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள பூங்காவில் கடந்த மார்ச் 31-ந் தேதியன்று பொது மக்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அப்பகுதியில் நடைபெறும் வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் பற்றியும், அதிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் சட்டம், ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.பி.எஸ்.வெங்கடேஷ்குமார் சில குறிப்புகளை அளித்தார்.
அதோடு, பொது மக்கள் யாராவது வெளியூர் செல்ல நேர்ந்தால், காவல் நிலையத்தில் விபரம் சொல்லி விட்டுச் சென்றால் அந்த வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுப்பதாகவும் கூறினார். மேலும், ஒவ்வொரு தெரு முனையிலும், மூன்று, நான்கு தெரு சந்திப்புகளிலும் CCTV கேமரா பொருத்தினால் குற்றங்கள் குறையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அந்த பொதுமக்கள் சந்திப்பின் போது பாதுகாப்பு குறித்த விபரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் காவல் துறையினர் விநியோகித்தார்கள்.

No comments:
Post a Comment