Sunday, 24 March 2013

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சலுகை

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், அண்ணாநகர் கோட்டத்திற்கு உட்பட்ட திட்டப்பகுதிகளான அண்ணாநகர், அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், மகாகவி பாரதி நகர், கும்மிடிப்பூண்டி, மாதவரம், கொடுங்கையூர், கீழ்முதலம்பேடு, மணலி பகுதி 1 & 2 சென்னையம்மன் கோவில், வில்லிவாக்கம், கொரட்டூர் மற்றும் கொளத்தூர் ஆகியவற்றில் ஒதுக்கீடு பெற்று கிரயப்பத்திரம் பெறாமல் உள்ள ஒதுக்கீடுதாரர்களுக்கு அரசு சில சலுகைகளை அரசு ஆணை எண்.215வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை/28.09.2012 மூலம் அறிவித்துள்ளது. அதன்படி, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கான ஒதுக்கீடுகளுக்கு விலையில் தற்போது நடைமுறையில் உள்ள 10% முன் வைப்புத் தொகைக்கு வட்டி, மாதாந்திர தவணைக்கடன் செலுத்தத் தவறியதற்கான அபராத வட்டி, வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி, நிலத்தின் இறுதி மதிப்பீடு வேறுபாட்டின் பேரிலான வட்டியில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாத வட்டி தள்ளுபடி முதலான சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. இச்சலுகை வரும் 27.03.2013 அன்றுடன் முடிவடைகிறது. செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்தி கிரையப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு அண்ணாநகர், கோட்ட செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் ஆகியோரை 044 - 26155362 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.  

No comments:

Post a Comment