Tuesday 7 June 2016

பூனைக்குட்டியை வளர்க்கும் நாய்

திருச்சி மாவட்டம் ஊத்துக்குழியைச் சேர்ந்த சுப்பிரமணி என்னும் விவசாயி நாய் மற்றும் பூனை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். இவர் வீட்டில் 5 நாய்கள் வளர்த்து வந்தார். அதோடு அந்த நாய்களை நன்றாக வேட்டையாடவும் பழக்கி வைத்துள்ளார். இவருக்கு பூனை வளர்க்கவும் ஆசை, ஆனால் நாயும் பூனையும் எதிர் எதிரே உள்ள துருவங்கள் போல இரண்டும் ஒத்துபோகாது.

அதனால் அவர் முதலில் பூனைக்குட்டி ஒன்றை வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார். பின்னர் 5 நாய்களில் ஒன்று குட்டி போட்டது. சிறிது நாட்களில் அனைத்து குட்டிகளையும் பலரும் எடுத்துச் சென்றனர். அதே நேரத்தில் பூனைக்குட்டியும் சரியாக பால் குடிக்காமல் இருந்துள்ளது.

இந்நிலையில் அந்த பூனைக்குட்டி நாயிடம் பால் குடிக்க சென்றது. நாயும் எதுவும் செய்யாமல் அதனுடைய குட்டிக்கு பால் கொடுப்பது போல் எண்ணி கொண்டது. இது அப்படியே தொடர்ந்து தற்போது 5 மாதங்கள் வரை நீடித்து வருகிறது.

நாய் வெளியே சென்று வீட்டுக்கு வந்தவுடன் பூனைக்குட்டி ஓடிப்போய் பால் குடிப்பதும், பூனைக்குட்டியை எதாவது நாய் விரட்டினாலோ பாலூட்டும் நாய் கோபமடைவதும் ஒரே பாச காட்சிகள் தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்வு, அந்த பகுதியில் உள்ள அனைவரையும் ஆச்சிரியத்தில் தள்ளியுள்ளது.

No comments:

Post a Comment