Monday 6 June 2016

விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் பன்றியின் உடலுக்குள் மனித உறுப்புகள்

மனித உறுப்புகளை பன்றியின் உடலுக்குள் உருவாக்கும் ஆராய்ச்சிகள் அமெரிக்காவில் தொடங்கியுள்ளன. மனிதக் குருத்தணுக்களை பன்றிகளின் கருக்களில் ஊசி மூலம் செலுத்தி சிமேரா என்றழைக்கப்படும் மனித-பன்றி கருக்களை உருவாக்கியிருக்கின்றனர் அவ்விஞ்ஞானிகள்.

உலகெங்கிலும் மாற்று உறுப்பு சிகிச்சைக்கு உறுப்புகள் போதிய அளவு கிடைக்காத பற்றாக்குறையைப் போக்கும் நோக்கில் இந்த முயற்சி நடக்கிறது.

கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, ’இந்த கருக்கள் பொதுவாக சாதாரண பன்றிக் கருக்களைப் போலத்தான் இருக்கும். ஆனால் அவற்றின் உறுப்புகளில் ஒன்று மனித செல்களால் உருவாக்கப்பட்டிருக்கும்’ என்று கூறுகிறது.

ஆனால் இந்த மனித-பன்றி சிமேராக்களால் ஆனா கருக்கள், 28 நாட்கள் வரை வளர அனுமதிக்கப்பட்டு பின்னர் அந்த கரு கலைக்கப்பட்டு, திசுக்கள் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த தொழில்நுட்பம் சர்ச்சைக்குரிய ஒன்று. ஏனெனில், இந்த மனித செல்கள் பன்றியின் மூளைக்குள் சென்றுவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சில வல்லுநர்கள் அஞ்சுகிறார்கள். இதனால் விளையும் அற ஒழுக்கம் சார்ந்த தாக்கங்கள் குறித்தும் கவலைகள் நிலவுகின்றன.

No comments:

Post a Comment