Friday, 20 May 2016

மின்சார வாரிய காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ஒத்திவைப்பு

மின்சார வாரியத்தின் காலிப் பணியிடங்களுக்கு நாளை நடைபெறவிருந்த எழுத்துத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிறப்புவுதற்கு நாளை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கள உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், உதவி வரைவாளர் உள்ளிட்ட 1,475 பணியிடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் எழுத்துத் தேர்வு நடைபெற இருந்தது. இந்நிலையில் நாளை நடைபெறவிருந்த இந்த தேர்வு தொழில்நுட்பக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள www.tangedco.gov.in என்ற இணைதளத்திற்கு செல்லவும். மின்சார வாரியத்தின் காலிப் பணியிடங்களுக்கு நாளை நடைபெறவிருந்த எழுத்துத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment