Friday, 20 May 2016

மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா


சட்டப்பேரவையில் அறுதிப் பெரும்பான்மையுடன், 6-வது முறையாக தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்க உள்ளார். தவிர, எம்ஜிஆருக்குப் பிறகு, ஆளுங்கட்சியாக இருந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்து அவர் சாதனை படைத்துள்ளார்.

தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக உறுப்பினர்களின் கூட்டத்தில், ஜெயலலிதா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். வரும் 23-ம் தேதி, சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற உள்ள விழாவில் அவர் முதல்வராகப் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment