Saturday 21 May 2016

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி தொடங்கியது

கோடை வெயிலுக்கு இதமாக நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் குளு குளு சீசன் தொடங்கியுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். கோடை சீசனையொட்டி, ஆண்டுதோறும் நீலகிரியில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி காண்காட்சி, உதகையில் ரோஜா கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. 
உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், குன்னூரில் பழக்கண்காட்சியும் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் சங்கர் இன்று தொடங்கி வைத்தார். குன்னூர் சிம்ஸ் பூங்கா பழக்கண்காட்சியை காண வெளியூர், வெளிமாவட்டம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.  பழக்கண்காட்சியை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் படகு இல்லத்தில் சவாரி செய்து மகிழ்கின்றனர். இந்த பழக்கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment