Saturday 21 May 2016

வானில் ஒரே நேர்கோட்டில் பூமி - செவ்வாய் - சூரியன்

பூமி, செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்கள், வானில் ஒரே நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு, நாளை ஞாயிறு(22-05-16) காலையில் நிகழவுள்ளது.தற்போது பூமியில் இருந்து 4.8 கோடி மைல் தொலைவிலுள்ள செவ்வாய் கிரகம், இந்த நிகழ்வின்போது சுமார் 4.6 கோடி மைல் தொலைவுக்கு பூமியை நெருங்கி வரும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பூமி, செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வருகின்றன. வரும் 2018-ஆம் ஆண்டு இதே போன்று நிகழும்போது செவ்வாய்க் கிரகம் சுமார் 3.6 கோடி மைல் தொலைவு வரை பூமியை நெருங்கி வரும் என்று அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியன், பூமிக்கு இடையே புதன் கிரகம் கடந்து செல்லும் அரிய நிகழ்வு, கடந்த வாரம் நிகழ்ந்தது.

No comments:

Post a Comment