Friday 27 May 2016

ஜாதி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட மாநில அரசு முடிவு

ஜாதி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிடுவதென மாநில அரசு முடிவுசெய்துள்ளது.

கர்நாடகத்தில் உள்ள பல்வேறு ஜாதிகளின் மக்கள் தொகையின் அடிப்படையில் இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசு சலுகைகளை வழங்குவதற்காக 2015 ஏப்.1-ஆம் தேதி முதல் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு எனப்படும் ஜாதி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

கர்நாடகத்தில் அதிக எண்ணிக்கையில் வாழும் ஜாதியாக கருதப்பட்டுவந்த லிங்காயத்து மற்றும் ஒக்கலிகர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக தகவல் பரவியது. இதை தொடர்ந்து, ஜாதி கணக்கெடுப்பை பகிரங்கப்படுத்த லிங்காயத்து மற்றும் ஒக்கலிகர் ஜாதி சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஜாதி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடுவதென மாநில அரசு முடிவுசெய்துள்ளது.

No comments:

Post a Comment