Wednesday 25 May 2016

மீன்வளப் பொறியியல், மீன்வள அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகத்தில் இளநிலை மீன்வளப் பொறியியல் மற்றும் மீன்வள அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை, மீன்வளப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பொறுப்பு) கு. ரத்னகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இளநிலை மீன்வள அறிவியல் பட்டப் படிப்புக்கு 110 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், இளநிலை மீன்வள அறிவியல் பட்டப் படிப்புகள் நடத்தப்படும் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 50 இடங்களும், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு 60 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

நாகப்பட்டினம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் மீன்வளப் பொறியியல் கல்லூரியில் இளநிலை மீன்வளப் பொறியியல் பட்டப்படிப்புக்கு 20 மாணவர்களும் சேர்க்கப்படுவர். மீன்வளப் பொறியியல் மற்றும் இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்புகள் படிக்க விரும்புவோர், மீன்வளப் பல்கலைக்கழகத்தின் இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ச்ன்.ஹஸ்ரீ.ண்ய் மூலம் ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம் எஸ்.சி, எஸ்சி-ஏ, எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 300. மற்ற பிரிவினருக்கு ரூ. 600. அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படாது. 

இது குறித்த மேலும் விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மதிப்பெண்கள் தரவரிசைப்பட்டியல் ஜூன் 30-ஆம் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். உத்தேசமாக ஜூலை 2 வது வாரத்தில் கலந்தாய்வு நடத்தப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment