Friday, 22 April 2016

வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி: கால அவகாசம் நீட்டிப்பு

அகில இந்திய அளவில், வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்திக் கொள்வதற்கான கால அவகாசத்தை, ஜூலை, 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, மத்திய தரைவழி மற்றும் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மத்திய தரைவழி மற்றும் போக்குவரத்து அமைச்சகம், 2015 ஏப்ரல், 15ல், அகில இந்திய அளவில் இயக்கப்படும் வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என உத்தரவு பிறப்பித்தது. மேலும், '2015 அக்.,1க்கு பின் தயார் செய்யப்படும் வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவியை, தயாரிப்பு நிறுவனங்களே பொருத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவு, கடந்த ஏப்.,1 முதல் அமலுக்கு வந்தது.  அதை அடுத்து, இந்த பிரச்னை குறித்து, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் மூலம் மத்திய அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதற்கான கால அவகாசத்தை, ஜூலை, 31ம் தேதி வரை நீட்டித்து, மத்திய தரைவழி மற்றும் போக்குவரத்து அமைச்சக செயலர் அம்பேல் டாங்கிள் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன, தமிழ்நாடு பொதுச் செயலர் தன்ராஜ் கூறியதாவது:வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் உள்ள குழப்பத்தை தீர்க்க, மாநில அரசு முன்வரவில்லை. தமிழகத்தில், 24 ஆயிரம் லாரிகள், பதிவை புதுப்பிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இப்பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொறுத்துவதற்கான கால அவகாசம், ஜூலை, 31 வரை நீட்டித்துள்ளது. இந்த கால அவகாசத்துக்குள், எந்தெந்த வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என்பதை மத்திய, மாநில அரசுகள் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment