Thursday, 21 April 2016

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு- தேர்தல் ஆணைய அனுமதியுடன் அறிவிப்பு

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படியை தமிழக அரசு உயர்த்தி வழங்கியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கும் போது, மாநில அரசு ஊழியர்களுக்கும் அதே அளவில் உயர்த்தி வழங்கப்படுவது வழக்கம். கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது 6% உயர்த்தப்பட்டது.
இதனால் அகவிலைப்படியின் அளவு 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக அதிகரித்தது. தமிழக அரசு ஊழியர்கள்: மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment