தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட வாக்காளர் பட்டியலில் அதிக வயதுள்ளவர்களின் பட்டியல் தனியாக எடுக்கப்பட்டுள்ளது. அதில், 100-வயதை கடந்தவர்கள் 7 ஆயிரத்து 627 பேர் உள்ளனர். இவர்களில் 130 வயதுக்கு மேற்பட்டவர்கள் 28 பேர் உள்ளனர். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 100 வயதை கடந்தவர்கள் அதிகபட்சமாக 597 பேர் வேலூர் மாவட்டத்தில் உள்ளனர். குறைந்தபட்சமாக கரூர் மாவட்டத்தில் 38 பேர் உள்ளனர். ஓட்டுப்போடும் போது வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்க தேவையில்லை. அவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று உடனடியாக வாக்களிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்ற விவரம் வருமாறு:-
வேலூர் 597, அரியலூர் 64, , சென்னை 434, கோவை 440, கடலூர் 217. தர்மபுரி 230, திண்டுக்கல் 306, ஈரோடு 311, காஞ்சீபுரம் 339, கன்னியாகுமரி 212, கரூர் 38, கிருஷ்ணகிரி 282, மதுரை 183, நாகப்பட்டினம் 168, நாமக்கல் 113, பெரம்பலூர் 48, புதுக்கோட்டை 130, ராமநாதபுரம் 166, சேலம் 328, சிவகங்கை 149, தஞ்சாவூர் 261, நீலகிரி 45, தேனி 145, திருவள்ளூர் 260, திருவாரூர் 120, தூத்துக்குடி 154, திருச்சி 277, நெல்லை 359, திருப்பூர் 403, திருவண்ணாமலை 303, விழுப்புரம் 355, விருதுநகர் 190, மொத்தம் 7,627
No comments:
Post a Comment